ஸ்லோகங்கள் இருபத்தி ஒன்றிலிருந்து இருபத்தி மூன்று வரை யார், யார் தன்னை எதிர்த்து போர் புரிய தாயாராக உள்ளனர் என்று அறிய தவிக்கிறான் அர்ஜுனன்.
अथ व्यवस्थितान्दृष्टवा धार्तराष्ट्रान् कपिध्वजः ।
प्रवृत्तॆ शस्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ॥ १-२० ॥
அத வ்யவஸ்திதான்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ரான் கபித்வஜ: |
ப்ரவ்ருத்தே சஸ்த்ரஸம்பாதே தனுருத்யம்ய பாண்டவ: || (1-20) ||
இந்த நிலையில் அணிவகுப்புடன் இருக்கின்ற திருதாஷ்டிரன் சம்பந்தப்பட்ட கௌரவப்படைகளை நோக்கி, ஆஞ்சநேயர் கொடியுடைய தேரில் இருக்கும் அர்ச்சுனன், போரை துவங்கும் நேரத்தில் பகவானிடம் தன் காண்டீபத்தை உயர்த்திக் கொண்டு ||
போர் வீர்ர்களால் பயன் படுத்தப்படும் சின்னங்களில்லேயே மிகவும் உன்னதமான சின்னம் “அனுமன்” சின்னம் தான் ஏனெனில் அனுமனின் வலிமை அளவில் அடங்காதது. அர்ச்சுனனின் தேரின் கொடியில் இருக்கும் அனுமன் சின்னம், அனுமனின் கவனம் சிதறாத ஶ்ரீராம பக்தியும், எதையும் சிரத்தையோடும் சாதிக்கும் வல்லமையும், பிரம்மச்சரிய ஒழுக்கத்தோடு நியமங்களை கடைபிடித்து இராமயணத்தில் அசுர மன்னன் இராவணனை தோற்கடிக்க இராம்பிரானுக்கு உதவியாக இருந்த அனுமனின் உருவ சின்னம், பாண்டவ சேனைகளுக்கு போர் புரிவதில் கவனம் சிதறாமலும், சிரத்தையோடும், யுத்த ஒழுக்க,நியமங்களை கடைபிடித்தும் தன்னுடைய அணியை வெற்றியடைய செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते ।
अर्जुन उवाच ।
सेनयॊरुभयॊर्मध्ये रथं स्थापय मेऽच्युत ॥ १-२१ ॥
ஹ்ருஷீகேசம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே |
அர்சுன உவாச:
ஸேனயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேச்யதே || (1-21) ||
திருதாஷ்டிரா! கீழ்கண்ட வார்த்தையை பகவானிடம் பேசினான். அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரிடம் இவ்விதம் சொன்னான். இரண்டு படைகளுக்கு மத்தியில் என்னுடைய ரதத்தை கொண்டு போய் நிறுத்து அச்சுதா!
यावदेतान्निरिक्षेऽहं योध्दुकामानवस्थितान् |
कैर्मया सह योध्दव्यमस्मिन् रणसमुद्यमे || १-२२ ||
யாவதேதாந் நிரீக்ஷேSஹம் யோத்துகாமானவஸ்திதான் |
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மின் ரணஸமுத்யமே || (1-22) ||
நான் கௌரவர் படைகளை தெளிவாக பார்க்க விரும்புகிறேன். எந்த இடத்தில் நிறுத்தினால் என்னால் தெளிவாக பார்க்க முடியுமோ அங்கு நிறுத்துங்கள். போர் புரிய விரும்புவர்களை, கௌரவர்களை, அணிவகுத்து நின்று இருப்பவர்கள். இந்த போர் புரியும் சமயத்தில் எவர்களுடன் என்னால் போர் புரிய வேண்டும் என்று பார்க்க விரும்புகின்றேன்.
योत्स्यमानानवेक्षेऽहं य एतेत्र समागताः ।
धार्तरष्ट्रस्य दुर्बुध्देर्युध्दे प्रियचिकीर्षवः ॥ १-२३ ॥
யோத்ஸ்யமானானவேக்ஷேSஹம் ய ஏதேSத்ர ஸமாகதா: !
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ: !! (1-23) !!
திருதாஷ்டிரனைச் சேர்ந்தவர்களின் தீய எண்ணங்களை உடையவர்கள். யார், யார் இங்கே கூடியிருக்கின்றார்கள். இந்த போரில் துரியோதனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக போரிட வந்திருக்கிறார்கள். அவர்களை நான் பார்க்க விரும்புகின்றேன். என்னுடைய ரதத்தை கொண்டு சென்று நிறுத்துங்கள்.
(அடுத்து ஸ்லோகங்கள் இருபத்தி ஒன்றிலிருந்து இருபத்தி மூன்று வரை யார், யார் தன்னை எதிர்த்து போர் புரிய தாயாராக உள்ளனர் என்று அறிய தவிக்கிறான்.)
இந்த 21-வது ஸ்லோகத்தில் தேரை இரண்டு சேனைகளுக்கு ‘மத்யே’ என்று ஒரு சொல் வருகிறது. ‘மத்யே என்ற ஸ்தானம்(இடம்)’ எனப்படுவது, இரு நாடுகளுக்கு இடையே யுத்தம் மூள்கிறது என்றால் அந்த இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான ஒரு இடம் காணும் அந்த பூமியை ‘நோமென்லாண்ட்’ என்று சொல்வார்கள், அப்படியென்றால் யுத்தம் புரியும் இரண்டு நாடுகளுக்கும் இடையே இரண்டு நாடுகளுக்கும் சொந்தமில்லாத பூமி கொஞ்சம் இருக்கும். அந்த இடத்தில் எந்த நாட்டு படைகள் நின்றாலும் யாரும் அவர்களை ஒன்றும் செய்யக் கூடாது. ஏதாவது ஒரு படையை சேர்ந்த வீரர்கள் அந்த எல்லையை கடந்தார்கள் என்றால் கடந்த வீர்ர்களை எதிர் போர் வீர்ர்கள் தாக்குவார்கள். இது யுத்த நியதி. இங்கே அர்ச்சுனன் மத்யே என்று குறிப்பிட்டது அந்த இடத்தை தான்.
22-வது, 23-வது ஸ்லோகத்தில், அர்ச்சுனன் தான் யார், யாரிடம் போரிட வேண்டுமோ அவர்களைப் பார்க்க வேண்டும், மேலும் எதிரணியின் பலத்தை நன்கு கணிப்பதற்கும், தன் படையினரின் பலத்தை மதிப்பிடவும் தன் தேரை இரு படையினரின் நடுவே கொண்டு போய் நிறுத்துமாறு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கேட்டு கொண்டான்.
இங்கு அர்ச்சுனன் பகவான் கிருஷ்ணனிடம், நான் போருக்காக துடித்துக் கொண்டிருக்கிறேன். எந்த இடத்திலிருந்து எதிரிகளை துவம்சம் பண்ண முடியுமோ அந்த இடத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்று சொல்ல வில்லை. என்னோடு மோத வந்திருப்பவர் யார், யார் அவர்கள் அமைத்தி ருக்கும் வியூகத்தில் யார், யார் எந்தெந்த ஸதானங்களில் இருந்து தாக்குதல் நடத்த இருக்கிறார்கள் என்பதை தெளிவாக பார்க்கும் இடம் நோக்கி என்னு டைய தேரை நிறுத்து என்று கூறுகிறான்.
அர்ச்சுனன் தன் தேரை யுத்த பூமியில் நடுவே நிறுத்த சொன்ன தருணமானது, இரண்டு சேனைகளும் யுத்தத்தை ஆரம்பிக்க அவரவர் சங்கை முழங்கி, சேனைகள் அஸ்திரங்களை உபயோகிக்க வேண்டிய கடைசி நிமிடம். சாதாரண யுத்த வெறி கொண்டவர்கள் ஆவேசத்துடன் வெறி கொண்டு அவரவர் அஸ்திரங்களை எடுத்து பிரயோகித்து யுத்தத்தை ஆரம்பித் திருப்பார்கள். எதிலும் வெறி கொண்டு செயலில் ஈடுபடுபவர்கள் ஜயிப்பது இல்லை. எந்த ஒரு செயலையும் ஆவேசத்தோடும், வெறியோடும் (குரோதத்தோடு) நிதான போக்கின்றி செயலாற்றும் தன்மை நம்மிடம் குடிகொள்ளும் போது நம்மிடம் ஆராயும் சக்தி குறைந்து விடுகிறது. குரோதபுத்தியும், ஆராய்ந்து செயல்படும் புத்தியும் சேர்ந்து இருப்பதில்லை.
நாம் எதிராளிகளிடம் போட்டியிட வேண்டிய தருணம் ஏற்பட்டால், நம்மை எதிர்க்கும் எதிராளியை பற்றி நன்கு அறிந்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். எதிரியின் வலிமை, அவர்களின் பின்பலம், அவர்களின் தகுதி ஆகியவற்றை நன்கு புரிந்து கொண்டவர்களால் தான் போட்டியில் வெல்லமுடியும். எதிரியையும், அவர்கள் தகுதியையும் அறிந்து கொள்ளாத போது தோல்வி முதலிலேயே நிச்சயமான ஒன்றாகிறது.
அர்ச்சுனன் போர் வெறியோடு யுத்தத்தை அணுகுவதில்லை, யுத்தத்தை கூர்ந்து ஆராய்ந்து போர் புரியும் வியூகம் நிறையவை அமைய பெற்றவன். தன்னிடம் போர் புரியும் வீர்ர்கள் யார், அவர்களின் வியூக அமைப்பையும் வீர்ர்களின் ஸ்தானத்தை நன்கு ஆராய்ந்து அதற்கேற்ற யுத்ததந்திரத்தோடு போர்புரிவதில் அவனுக்கு நிகர் அவனே.
போர் ஆரம்ப கட்டத்தில் அர்ச்சுனன் மன திடத்தோடு தெளிவாக இருந்தான்.
அடுத்த ஸ்லோகங்கள் அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட மன மாற்றங்களை எடுத்து ரைக்கிறது.
No classes added yet.






Users Today : 3