Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson -01 Arjuna Vishada Yogam – Tamil » ஸ்லோகம் – 24 முதல் 27 வரை

ஸ்லோகம் – 24 முதல் 27 வரை

सञ्जय उवाच ।

एवमुक्ते हृषीकेशो गुडाकेशेन भारत ।

सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् ॥ १-२४ ॥

சஞ்சய் உபவாச:

ஏவமுக்தோ ஹ்ருஷீகேசோ குடாகேசேன பாரத!

ஸேனயோருயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் !! (1-24) !!

சஞ்ஜயன் கூறினான்: இவ்விதம் அர்ச்சுனால் கட்டளையிடப்பட்டதும் பகவான் (ஹ்ருஷீகேஶ), உறக்கத்தை வென்றவன் (குடாகேஸன்) அர்ஜுனனை,  இரண்டு படைகளுக் குமிடையில் மேலான ரதத்தை கொண்டு நிறுத்தினார்.

भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम् ।

उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति ॥ १-२५ ॥

பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் மஹிக்ஷிதாம் |

உபவாச பார்த்த பச்சை தான் ஸமவேதான் குரூனிதி || (1-25) ||

பீஷ்மர், துரோணர் இவர்கள் முன்னிலையில் ரதம் நிறுத்தப்பட்டது.  எல்லா அரசர்களின் முன்னிலையிலும் ரதம் நிறுத்தப்பட்டது. பிறகு பகவான் சொன்னார்,  பார்த்தா! நீ பார், இவர்களை, இங்கு கூடியிருக்கும் குரு வம்சத்து கௌரவர்களை பார்.

तत्रापस्यस्त्थितान्पार्थाः पित्दृनथ पितामहान् ।

आचार्यन्मातुलान्भ्रातृन्पुत्रान्पौत्रान्सखींस्तथा ॥ १-२६ ॥

தத்ரபச்யத் ஸ்திதான் பார்த்த: பித்ரூனத பிதாமகன் !

ஆச்ர்யான் மாதுலான் ப்ராத்ரூன் புத்தரின் பெளத்ரான்

ஸகீன்ஸ்ததா || (1-26) ||

அர்ஜுனன், கௌரவர்களின் சேனையில் நின்று கொண்டிருப்பவர்களை பார்த்தான்.  தந்தைமார்களை பார்த்தான். மேலும் பாட்டானார்களான பீஷ்மரைப் பார்த்தான். துரோணர், கிருபாச்சாரியர் போன்ற ஆச்சார்யர்களைப் பார்த்தான். மாமன்மார்களை, சகோதரர்களையும், மகன்களானயும், பேரன் களையும் மேலும் நண்பர்களையும் பார்த்தான்

श्वशुरान्सुहृदश्चैव सेनयॊरुभयोरपि ।

तान्समीक्ष्य स कौन्तेयः सर्वान्बन्धूनवस्थितान् ॥ १-२७ ॥

ச்வாசுரான்ஸுஹ்ருதஸ்சைவ ஸேனயோருபயோரபி |

தான்ஸமீக்ஷ்ய ஸகெளந்தேய: ஸர்வான்பந்தூனவஸ்திதான் || (1-27) ||

மேலும் மாமனார்களைப் பார்த்தான்.  தனக்கு நன்மை செய்தவர்களைப் பார்த்தான். இரண்டு சேனைகளிலும் இவர்களைப் பார்த்தான்.  அவர்களுடன் கழித்த நாட்களை எண்ணிப் பார்க்கின்றான். எல்லா உறவினர்களையும் ஆலோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

விளக்கம்:

இருப்பத்தி நான்காம் ஸ்லோகத்தில் அர்ச்சுனனை குடாகேசன் என்று வர்ணிக்கப்படுகிறது. குடாகேசன் என்றால் தூக்கத்தை வென்றவன் என்று பொருள். மனதை நன்கு வென்றவனுக்கே தூக்கத்தை வெல்லமுடியும். மனதை வென்றவன் எதற்கும் கலங்கான். அத்தகைய மன உறுதியுடை யவனான அர்ச்சுனன் மன கலக்கத்தில் ஆள்கொள்ள போகிறான் என்பதை இந்த ஸ்லோகத்தில் குடாகேசவன் என்ற அடை மொழியால் நமக்கு உணர்த்தப்படுகிறது.

இருப்பத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் பகவான் தேரை நிறுத்திய இடம் வர்ணிக்கப்படுகிறது. தேர் பிதாமகர் பீஷ்மாச்சாரியார், குரு துரோணாச் சாரியார் முன்னிலையில் நிறுத்தப்பட்டது. இந்த இடம் சற்று சிந்திக்க வேண்டிய இடம்.

மகாபாரத யுத்தம் பூரணமாக அர்ச்சுனனை சுற்றி நிகழ்ந்ததாக நிச்சயிக்கப் பட்டது. யுத்தம் முடிந்த பின், அதன் முடிவுகள் தெரிந்த பின் யுத்தம் நடந்த முறை, வெற்றி, தோல்வி, செய்யப்பட்ட வீரதீர செயல்கள் இவை யாவும் அறிந்த பின்னரே இப்போர் முழுவதும் அர்ச்சுனனை அச்சாணியாக கொண்டே சுழன்றது என்று சொல்ல முடிந்தது. இந்த யுத்தம் தர்மத்தை நிலை நாட்ட பரமாத்மாவினால் வழி நடத்தபட்ட போர், அர்ச்சுனனின் மனதை ஏனையேரை விட கிருஷ்ணர் நன்கு அறிந்தவர். அர்ச்சுனின் வீரம்,  பலம், அன்பு, பற்று, பலவீனம், யாவும் கிருஷ்ணர் அறிந்ததே. போரில் வென்று தர்மத்தை நிலை நாட்ட அர்ச்சுனனின் வீரம், பலம் முழுமையாக தேவை. ஒரு செயலை முழுமையாக செய்து முடிக்க வேண்டுமெனில் நம் மனம் முழுமையாக அந்த செயலில் ஈடுபட வேண்டும். அப்படியெனில் மன குழப்பத்திற்கு இடமளிக்க கூடாது. மனம் தெளிவோடு செயலாற்ற வேண்டு மெனில் பலவீனத்தை அகற்ற வேண்டும். இதை உணர்ந்த கிருஷ்ணர் அர்ச்சு னின் பலவீனத்தை அகற்ற முயன்றார். அதற்கான முயற்சி தான் பகவான் கிருஷ்ணர் தேரை பீஷ்மர், துரோணர் முன்னிலையில் கொண்டு வந்து நிறத்தினார். அதே நேரம் துரியோதனன், சகுனியின் எதிரே நிறுத்தினால் நிலமையே தலை கீழாக மாறி இருக்கும். நமக்கு இப்படி ஒரு கீதை என்கிற அமிர்தமும் கிடைத்திருக்காது.

.அர்ச்சுனன் பீஷ்மரிடமும், துரோணரிடமும் மற்றும் உறவினரிடமும் கொண்டுள்ள பற்றும், பாசமும், பக்தியும் பகவான் கிருஷ்ணருக்கு நன்கு தெரியும். ஆரம்பத்தில் அர்ச்சுனன் முழு மனதோடு யுத்தம் புரிந்தாலும், பீஷ்மருக்கோ, துரோணருக்கோ, அல்லது தன்னை சார்ந்த யாருக்கேனும் மரணம் நேர்ந்தால் அர்ச்சுனனால் தொடர்ந்து முழு மனதோடு யுத்தம் செய்வது சாத்தியமா என்பது சந்தேகம். ஆகையால் அர்ச்சுனனுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்த யுத்தம் நெருங்கி விட்ட போது, யுத்தத்தைத் துவங்க வேண்டிய நெருக்கடியான தருணத்தில் தேரை பீஷ்மர், துரோணர்  முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தி  ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார். அசாதாரண நேரங்களில் தான் நமது மனதின் ஆழத்தில் அடிதளத்தில் ஒழிந்திருக்கும் குணநலன்கள் வெளிப்படத் தொடங்குகின்றன.

ஸ்லோகம் 26-வது,27-வது அர்ச்சுனன் கெளரவ சேனையில் நின்று கொண்டி ருப்பவர்களை தன்மனிதர்களாக பார்த்தான். பீஷ்மாச்சாரியரை தன் பாட்டனா கவும், துரோணாச்சாரி, கிருபாச்சாரி இவர்களை குருவாகவும் மற்ற படை வீர்ர்களை மாமன்மார்களாகவும், சகோதரர்களாகவும், மகன்களாகவும், பேரன் களாகவும் மேலும் நண்பர்களையும் பார்த்தான், இரண்டு சேனைகளிலும் இவர்களைப் பார்த்தான். அவர்களுடன் கழித்த நாட்களை எண்ணிப் பார்க்கின்றான்.

அர்ச்சுனன் மனதில் அளவிட முடியாத மாற்றம் நிகழ்கிறது.

No classes added yet.

Our Visitor

000798
Users Today : 2