Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson – 02 Sankiya yogam – Tamil » ஸ்லோகம் – 21

ஸ்லோகம் – 21

वेदाविनाशिनं नित्यं य एनमजमव्ययम् ।

कथं स पुरुषः पार्थ कं घातयति हन्ति कम्॥ २१ ॥

வேதாவிநாஸிநம் ய நித்யம்  ஏநமஜமவ்யயம் |

கதாம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம் || 21 ||

பார்த – ப்ருதையின் மைந்தனே அர்ஜுனா;

ய: புருஷன் – எந்த புருஷன் (ஞானி)

ஏநம் – இந்த ஆத்மாவை; அவிநாஸிநம் – அழிவற்றவன்;

நித்யம் – நித்யமானவன்; அஜம் – பிறப்பற்றவன்;

அவ்ய்யம் – மாறுதலற்றவன்; வேத – அறிகிறானோ; ஸ: – அவன்;

கதம் – எவ்வாறு, எப்படி; கம் – யாரை;

காதயதி – கொல்லச் செய்கிறான்?; ஹந்தி – கொல்கிறான்.

இந்த ஸ்லோகத்தில் ஆத்மா அகர்த்தா என்ற கருத்தைக் கூறி ஆத்மா        நஹேதுகர்த்தா என்ற கருத்தையும் கூறுகிறார். சமஸ்கிருதத்தில் ஹேதுகர்த்தா என்றால் தூண்டிவிடுதல் ஒருவனை ஒரு காரியத்தில் தூண்டி அந்த காரியத்தை செய்ய வைத்தல். இரண்டு விதமான கர்த்தாக்கள் இருக்கிறார்கள். ஒரு விதமான கர்த்தா செயலை செய்பவன் அவன் கர்த்தா. ஒரு மாணவன் படிக்கின்றான், படித்தல் என்ற செயலை செய்யும் அவனுக்கு கர்த்தா என்று பெயர். ஆசிரியர் அந்த மாணவனை படிக்க வைக்கிறார் படிக்க வைக்கும் அந்த ஆசிரியருக்கு ஹேதுகர்த்தா என்று பெயர். ஹேதுகர்த்தா என்றால் ஒருவர் இனியொருவரை ஒரு காரியத்தை தூண்டி செய்ய வைத்தல். ஹேதுகர்த்தா என்பதை வேறெரு சொல்லில் சொன்னால் காரயிதா. கர்த்தா என்றால் செய்பவன், காரயிதா என்றால் செய்விப்பவன்.

இங்கு குறிப்பாக ஆத்மா தானாக எதையும் செய்வதில்லை என்று ஏற்கனவே சொன்ன கருத்தை சொல்லி பிறகு மற்ற ஒன்றையும் செய்ய தூண்டுவதும் இல்லை என்று பகவான் கூறுகிறார்.

இந்த ஸ்லோகத்தில் ஆத்மா எதையும் செய்விக்கவில்லை என்று நேரடியாக கூறவில்லை. அதற்கு பதிலாக இந்த ஸ்லோகத்தில் பகவான் ஞானியை கொண்டு வருகிறான். அதனால் தான் இந்த ஸ்லோகத்தை ஶ்ரீசங்கராச்சாரி -யார் முக்கியமாக கருதுகிறார். காரணம் என்னவென்றால் இதுவரை ஆத்ம தத்துவத்தையே பேசி வந்த பகவான் இவ்விதம் ஆத்மாவை அறிகின்ற ஞானியானவன் தான் எதையும் செய்ய மாட்டான், எதையும் செய்விக்க மாட்டான் என்று சொல்லுகின்றார். ஆகவே இந்த ஸ்லோகத்தில் இதனுடைய மைய கருத்து ஆத்மா எதையும் செய்ய தூண்டுவதில்லை என்பது தான் ஆனால் இதே ஸ்லோகத்தில் இந்த ஆத்ம ஞானத்தினுடைய பலனும் சொல்லப்படுகின்றது. காரணம் என்ன பகவான் ஆத்மா ஒன்றும் செய்வதில்லை, செய்விப்பதும் இல்லை என்று சொல்வதற்கு பதிலாக இந்த ஆத்மாவை அறிந்த ஞானி ஒன்றும் செய்வதில்லை, ஒன்றும் செய்விப்பது மில்லை, யாரையும் எதிலும் தூண்டுவதுமில்லை என்று பகவான் கூறுகின்றார். ஆகவே இது ஆத்மாவினுடைய லக்ஷ்ணம் ஆனால் ஞானியினுடைய லக்ஷ்ணமாக பகவான் குறிப்பிடுகிறார். அப்பொழுது சந்தேகம் நமக்கு வரலாம் ஞானியினுடைய லக்ஷ்ணத்தை பகவான் பேசுகிறாரா, ஆத்மாவினுடைய லக்ஷ்ணத்தை பேசுகிறாரா என்றால் அதற்கு பதில் ஆத்மாவும், ஞானியும் ஒன்று தான் காரணம் நாம் எந்த இடத்தில் ‘நான்’ என்கிற அபிமானம் இருக்கின்றதோ அதுதான் நாமாக இருக்கின்றோம். இந்த உடலில் நான் என்கிற புத்தி இருந்தால் நாம் அதுவாக இருக்கின்றோம். மனதில் நான் என்கிற புத்தி இருந்தால் நாம் அதுவாக இருக்கின்றோம். ஆத்மா நான் என்று உணர்ந்தால் அதுவாக நாம் இருக்கின்றோம். ஆகவே இங்கு ஞானியானவன் எதையும் செய்வதில்லை, எதையும் செய்விக்க வில்லை என்று பகவான் கூறுகிறார்.

நாமாக ஒரு காரியத்தை செய்தால் பாவம் வரும். நாமாக செய்தால் தானே பாவம் வரும் இனியொருத்தனை வைத்து செய்து அதன் பலனை அனுபவித்து கொள்ளலாமென்றாலும் அதற்கும் பாவம் வரும். நீதிமன்றத்தி லும் தவறு செய்தவனுக்கு என்ன தண்டனையோ அதே தண்டனை தவறு செய்ய தூண்டயவனுக்கும் அளிக்கபடுகிறது காரணம் தவறு செய்ய தூண்டி யவனும் கர்த்தா தான் அதற்கு ஹேதுகர்த்தா, காரயிதா என்று பார்த்தோம். மேலும் ஒருவன் ஒரு தவறான செயலை செய்தால் ஒரு பாவம் வந்து சேரும். அதே சமயம் இனியெருத்தனை வைத்து அந்த செயலை செய்வித் தால், தான் அந்த செயலை செய்வித்த பாவமும், இனியொருத்தனை தூண்டி விட்டு செய்த பாவமும் என இரண்டு வித பாவம் நம்மை வந்து சேரும். ஆகவே செயல் செய்தால் கர்த்தாவுக்கு என்ன பாவம் வரமோ, அதே பாவம் ஹேதுகர்த்தாவக்கும் வந்து சேரும். இனியெருத்தன் தானே செயலை செய்தான் என்று ஹேதுகர்த்தா அந்த செயலின் பாவத்திலிருந்து விடுபட முடியாது. ஆகவே நாம் ஒரு தவறு செய்ய கர்த்தாவாகவும் இருக்க கூடாது, ஹேதுகர்த்தாவாகவும் இருக்க கூடாது. அதைதான் பகவான் கூறியுள்ளார். இதிலிருந்து ஆத்மா ஒன்றும் செய்வதில்லை செய்ய தூண்டுவதுமில்லை என்றால் ஆத்மா விகாரமற்றது ஆகவே அகர்த்தா, ஞானியும் தன்னை விகாரமற்றவனாக உணர்வதால் ஞானியும் அகர்த்தா, மேலும் ஞானியும் யாரையும் ஒரு செயலை செய்ய தூண்டுவதில்லை. ஆகையால் ஆத்மாவும், ஞானியும் ஒன்றாகவே இருக்கின்ற காரணத்தினால் ஆத்மாவினுடைய இலக்கணம் ஞானிக்கு வருகின்றது, ஞானியினுடைய லக்ஷ்ணம் ஆத்மாவிற்கு செல்கின்றது. ஆத்மா ஒன்றையும் செய்வதில்லை, செய்விக்க வில்லை, ஞானியும் ஒன்றையும் செய்வதில்லை செய்விப்பதுமில்லை. அப்படியென்றால் ஆத்மா யார் என்றால் ஆத்மா வெறும் சாட்சி மட்டும். ஞானியும் சாட்சியாக இருக்கிறார். பிறகு செய்வது, செய்விப்பது யார் என்றால் உடல், மனம், புத்தி. இவைகள் தான் கர்த்தா, ஹேதுகர்த்தா.

இந்த ஸ்லோகம் ஆத்மாவின் சொரூபத்தை விளக்குவதாக எடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு ஞானி எதையும் செய்வதில்லை, செய்விப்பதும் இல்லை என்று  சொல்வதிலிருந்து ஆத்ம ஞானத்தினுடைய பலனாக ஞானிக்கு கர்த்ருத்துவமும், காரயத்துவமும் சென்று விடும் என்று ஞானத்தின் பலனும் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுகின்றது.

இந்த ஸ்லோகத்திற்க்கு ஶ்ரீசங்கராச்சாரியார் ஒரு சிறிய விசாரம் செய்து உள்ளார். ஞானிக்கு கர்மத்திலிருந்து சாஸ்திரம் விடுதலை அளிக்கின்றது. சாஸ்த்திரத்தில் விதவிதமான கடமைகள, கர்மங்கள் எல்லாம் பேசப் பட்டுள்ளன. அக்னி ஹோத்திரம், சந்தியாவந்தனம், ஆஸ்ரமத்திற்கு தகுந்தாற் போல் விதவிதமான கடமைகள் பேசப்பட்டுள்ளது. அந்த கடமை கள் எல்லாம் எதற்கு, எதுவரை என்றால் மனதூய்மை அடைந்து ஞான யோகத்திற்கு வரும் வரை. ஞான யோகத்திற்கு வந்ததற்கு பிறகு ஞானத்தை அடைந்து ஞானநிஷ்டையை அடைந்தவனுக்கு ஒருவிதமான கடமைகளும் கிடையாது. ஆகவே ஞானிக்கு கர்ம அபாவ:, ஞானிக்கு எந்த விதமான கடமையும் இல்லை என்பதை இந்த ஸ்லோகம் நமக்கு காட்டுகின்றது. இங்கு ஒரு சந்தேகம் எழுகிறது. ஞானிக்கு எந்த விதமான கர்மமும் இல்லை என்றால் வேதத்தில் எத்தனையோ கர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை எல்லாம் அர்த்தமில்லாமல் ஆகி விடுமே என்றால் அதற்கு பதில் சொல்கின் றார். ஞானிக்கு தான் வேதத்தின் கர்மகாண்டம் பிரயோஜனமில்லையே தவிர அஞ்ஞானிகளுக்கு என்றைக்குமே கர்மகாண்டம் பிரயோஜனமாக இருந்து வருகிறது. ஞானத்தை அடைந்த ஞானிகளுக்குத் தான் கர்மகாண்டம் பலன் இல்லை. ஆகவே ஞானிகள் எதையும் செய்வதில்லை, செய்விப்பதும் இல்லை என்று கர்த்ருத்துவமும், காரயத்துவமும் சென்று விடும் என்று ஞானத்தின் பலனும் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுகின்றது.

No classes added yet.

Our Visitor

000559
Users Today : 3