अविनाशि तु तद्विध्दि येन सर्वमिदं ततम् ।
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति ॥ १७ ॥
அவிநாசி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம் |
விநாச-மவ்யயஸ்யாஸ்ய ந கச்சித் கர்த்து-மர்ஹதி || 17 ||
அவிநாசி து – அழிவற்றதுதான் என்று; தத் – அதை; வித்தி – அறிந்துகொள்;
யேந – அதனால்; இதம் ஸர்வம் – காணப்படும் பொருட்கள் அனைத்தும்; ததம் – வ்யாபிக்கப்பட்டிருக்கிறதோ; அஸ்ய – அந்த; அவ்ய்யஸ்ய – அழிவற்றதற்கு; விநாசம் – அழிவை; கர்தும் – உண்டாக்குவதற்கு; கஸ்சித் – எவரும்; ந அர்ஹதி – ஆற்றல் பெற்றவரல்லர்.
இந்த ஸ்லோகத்தின் மைய கருத்து ஆத்மா எல்லாயிடத்திலும் இருக்கிறது இதோடு இனியொரு கருத்தும் வருகிறது ஆத்மாவை அழிக்க முடியாது. ஆதமாவை அழிப்பதற்கு யாரும் கிடையாது. ஶ்ரீ சங்கராச்சாரியார் விளக்கத்தில் இந்த ஆத்மாவை ஈஸ்வரனால் கூட அழிக்க முடியாது என்று எழுதியுள்ளார். காரணம் இந்த ஆத்மாவே ஈஸ்வரனாக இருப்பதனால் அவராலேயே இந்த ஆத்மாவை அழிக்க முடியாது என்று விளக்கம் கொடுக்கிறார்.
இயற்கை நியதி காலத்தையும், தேசத்தையும் பிரிக்க முடியாது, அது எப்படியென்றால் ஒரு இடம் இருக்கிறது அந்த இடத்தில் ஒரு நேரத்தில் யாரோ ஒருவர் தான் அமர முடியும். பிறகு வேறு நேரத்தில் இதே இடத்தில் வேறு ஒருவர் அமரலாம், ஆனால் ஒரே இடத்தில் ஒரே காலத்தில் இரண்டு பேர் இருக்க முடியாது. ஆத்மா நித்ய: என்று சொன்னதிலிருந்து மூன்று காலத்திலும் ஆத்மா நித்யம் என்று சொல்லியாகி விட்டது. அது பூர்ணம் என்றால் எல்லா தேசத்திலும் அது இருப்பதாக ஆகின்றது. காலத்தின் அடிப்படையில் நித்யத்துவத்தை சொல்லி, தேசத்தின் அடிப்படையில் பூர்ணத்துவத்தை பகவான் கூறுகிறார். ஆத்மா எல்லா (மூன்று) காலத்திலும், எல்லா தேசத்திலும் இருக்கிறதென்றால் மேலே கூறிய இயற்கை நியதி படி ஆத்மா ஒன்று (ஏக:) என்று தெளிவாகிறது. இந்த ஆத்மா ஒன்றாக இருப்பதால் மட்டுமே எல்லா காலத்திலும், எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறது. ஏகமாக இருக்கும் இந்த ஆத்மா நிரஅவயமாகவும் இருக்கிறது. நிரஅவயம் என்பதன் விளக்கம், எதற்கு உருவம் இருக்கின்றதோ அதுதான் ஆகாசத்திற்குள் அடங்கும். உருவம் இல்லாதது ஆகாசத்திற்குள் அடக்க முடியாது. அதே போல் ஆத்மா உருவமற்ற காரணத்தினால் பார்க்கபடும் பொருளாக இல்லாமல் பார்பவனாக இருப்பதால் ஆத்மா ஸர்வகத: எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிற ஏகமாக இருப்பதால் இதற்கு அழிவு என்பதே இல்லை.
இந்த ஆத்மாவிற்கு வேறொரு இலட்சணமும் சொல்கிறார் அவ்யயஸ்ய. அவ்யயமான என்றால் மாறாத, சீர்கேடு அடையாத; அஸ்ய என்றால் இந்த ஆத்மாவை; கச்சித் என்றால் யாராலும்; விநாசம் என்றால் அழிக்க, கர்த்தும் என்றால் செய்ய: ந அர்ஹதி அர்கதை கிடையாது. மாறாத அல்லது சீர்கேடு அடையாத இந்த ஆத்மாவை அழிக்க யாருக்கும் அர்ஹதை அல்லது சக்தி கிடையாது.
இந்த ஸ்லோகத்தில் அவ்யயஸ்ய என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார் அதற்கு பொருள் பார்ப்போம். சமஸ்கிருதத்தில் விய: என்றால் செலவு என்று அர்த்தம். சாஸ்திரத்தில் இந்த சொல்லிற்கு மாற்றம், தேய்வு, சீர்கேடு என்று பொருள்படும். அவ்விய: என்றால் மாறாதது, தேய்வற்றது, சீர்கேடற்றது. அவ்ய்யஸ்ய என்றால் இந்த ஆத்மாவிற்கு மாற்றம், தேய்வு, சீர்கேடு கிடையாது. அவ்வியமான ஆத்மாவிற்கு தேய்வு இல்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. எதற்கு சீர்கேடு, மாற்றம் வருகிற தென்றால் எதற்கு அங்கங்கள் இருகின்றதோ அதற்குதான் சீரகேடு வரும். அங்கங்கள் என்றால் அவயகங்கள். இந்த அவயகங்களுக்கு வருகின்ற சீர்கேடு அவயகங்களை உடையவனுக்கு வருகின்றது. ஆகவே அவயகங்கள் எதற்கு இருக்கின்றதோ, அதற்கு சீர்கேடு வர தான் செய்யும். ஆத்மா நிரஅவய: அவயகங்கள் இல்லாத காரணத்தினால் இந்த ஆத்மாவுக்கு சீர்கேடு கிடையாது.
மேலும் ஒருவர் தன்னை எப்படி சீர்கேட்டிற்கு ஆளாகி கொள்கிறார் என்றால் தனக்கு ஏதாவது சீர்கேடு வந்து அதனால் துயரப்படுவது என்பது நியாயம். ஆனால் தனக்கு எந்த சீர்கேடும் இல்லாது நம்மை சுற்றி இருக்கின்ற பொருள்கள் அல்லது மனிதர்கள் நம்மை சார்ந்தது என்ற சங்கம புத்தி வந்து விட்டால் அந்த பொருளினுடையதோ அல்லது மனிதர்களுடைய சீர்கேடோ, அழிவோ தனக்கு ஏற்பட்டதான பாவனையில் தன்னை சீர்கேட்டிற்கோ அல்லது அழிவிற்கோ ஆளாக்கி கொள்வார். இந்த செயலை ‘ஆத்மீகபாவம்’ என்று சொல்லபடுகிறது. இதன் காரணம் மனதிலிருக்கின்ற ஒரு பாவனை அவ்வளவு தான். ஆனால் இந்த பாவனையோ, சங்கமமோ இந்த ஆத்மா விற்கு கிடையாது ஆகையால் ஆத்மாவிற்கு சீர்கேடோ, தேய்வோ, அழிவோ என்பது கிடையாது.
இந்த ஸ்லோகத்தினுடைய சாரம் ஆத்மா எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறது. ஆத்மாவை யாராலும் அழிக்க முடியாது.
No classes added yet.






Users Today : 2