न हि प्रपश्यामि ममापनुद्याद्यच्छोकमुच्छोपणमिन्द्रियाणाम् ।
अवाप्य भूमावसपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम् ॥ ८ ॥
ந ஹி ப்ரபச்யாமி மமாபனுத்யாத் யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம் |
அவாப்ய பூமாவஸபத்னம்ருத்தம் ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம் || 8 ||
ஹி – ஏனெனில், பூமெள – பூவுலகில், அஸபந்தம் – எதிரிகளற்ற, ருத்தம் – தனதானியங்கள் நிறைந்த, ராஜ்யம் ச – ராஜ்யத்தையும், ஸுராணாம் – தேவர்களுக்கு, ஆதிபத்யம் -அதிபதியாக இருப்பதையும், அவாப்ய அபி -அடைந்தாலும் கூட, யத் – எது, ம்ம – என்னுடைய, இந்திரியாணாஸ் – புலன்களை, உச்சோஷணம் – வாட வைக்கின்ற, சோகம் – சோகத்தை, அபநுத்யாத் – போக்கடிக்கமோ, (தத் – அதை), ந ப்ரபச்யாமி – (நான்) காணவில்லை.
ஸ்லோக பொருள்:
ஏனெனில் பூவுலகில் எதிரிகளற்ற தனதான்யங்கள் நிறைந்த ராஜ்யத்தையும், தேவர்களுக்கு அதிபதியாக இருப்பதையும் அடைந்தாலும் கூட எது என்னுடைய புலன்களை வாட வைக்கின்ற சோகத்தைப் போக்கடிக்குமோ அதை நான் காணவில்லை.
விளக்கம்:
மிகவும் சஞ்சலமான மன நிலையில் முன் ஸ்லோகத்தில் அர்ச்சுனன் புத்திமதி கூறுங்கள் என்றார். “நீங்கள் முதலில் யுத்தம் செய்வாயாக என்று கூறினீர்கள். அந்த யுத்தத்தினால் அதிக பட்சமாக கிடைக்கப் போவது வெற்றி தானே? அது கிடைத்தால் எதிரிகளின்றி அரசாளலாம், மேலும் தேவர்களின் ஆதிபத்யம் கிட்டினாலும்கூட என் புலன்களை வாட்டி வதைக்கும் சோகத்தை அது அழிக்கவல்லதன்று. ஆகவே எனக்கு நிச்சயமான ஒரு உபாயம் கூறுங்கள், என்னுடைய புலன்களை வாட்டுகின்ற சோகத்தை விலக்கி, நான் எப்போதும் சுகமாக இருக்க வழி கூறுங்கள்” என்று மற்றவர்களிடம் தனது மன துயரத்தை மறைத்து வைக்கும் இளம் மாது ஒருத்தி பெற்ற தாயிடம் தயங்காது யாவையும் வெளியிடுவதை போல். அன்பும், அனுதாபமும் உள்ள இடத்தில் மனதை உள்ளப்படி சமர்ப்பிப்பது மிக எளிதாகிறது. தாயினும் சால பரிந்து கேட்பவர் ஒருவரிடம் அங்ஙனம் வாய்விட்டுப் பகரவதால் துயரம் என்னும் மனசுமை குறைகிறது. இங்கு ஶ்ரீகிருஷ்ணனுக்கும், அர்ச்சுனனுக்கும் இடையில் உள்ள இணக்கம் மேலானது, தாயின் வாத்ஸல்யமும், தந்தையின் பராமரிப்பும், குருவின் கட்டுப்பாடும், அரசனது நேர்மையும், கடவுளது கிருபையும் ஒருங்கிணைந்த இணக்கம் இருவருடையது. இவ்விணக்கம் ஆகையால் அர்ச்சுனன் தன் மனக்கிலேசத்தை விரித்து விளக்குகிறான்.
இதற்கு பிறகு அர்ச்சுனன் என்ன செய்தார் என்பதை இனி சஞ்சயன் கூறுகிறார்.
No classes added yet.






Users Today : 6