न चैतद्विद्मः कतरनो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः |
यानेव हत्वा न जिजीविषामस्तेऽवस्थिताः प्रमुखे धार्तराष्ट्राः || ६ ||
ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு: |
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ் தேவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா: || 6 ||
ந: – நமக்கு (போரிடுவதா, வேண்டாமா என்ற); ஏதத் ச – இதையும்; ந வித் ம: – அறியோம்; கதரத் – இவ்விரண்டில் எது; கரீய: – சிறந்தது?; யத் வா ஜயேம – அல்லது (நாம்) அவர்களை வெற்றி கொள்வோமா?; யதி, வா – அல்லது; ந: – நம்மை;
ஜயேயு: – (அவர்கள்) வென்று விடுவார்களா?;
யாந் – எவர்களை; ஹத்வா – கொன்று:
ந ஜிஜீவிஷாம: – (நாம்) வாழக்கூட விரும்பவில்லையோ,
தே – அந்த; தார்தராஷ்ட்ரா: த்ருதராஷ்ட்ர குமாரர்களே,
ப்ரமுகே – நம் முன்னே;
ஏவ அவஸ்தி தா: – (நம்மை எதிர்த்து) நிற்கிறார்கள்.
ஸ்லோக பொருள்:
போரிடுவதா, வேண்டாமா என்ற இவ்விரண்டில் நமக்கு எது சிறந்தது? அல்லது நாம் அவர்களை வெற்றி கொள்வோமா? அல்லது நம்மை அவர்கள் வென்று விடுவார்களா? இதையும் அறியோம். எவர்களைக் கொன்று நாம் வாழக்கூட விரும்பவில்லையோ நம்மவர்களான அந்த திருதராஷ்ட்ர குமாரர்களே நம் முன்னே நம்மை எதிர்த்து நிற்கிறார்கள்.
எல்லா மனிதர்களும் மோஹத்தில் அகப்பட்டு, எது சத்தியம் என்பது தெரியவில்லை. மேலும் எதை தெரிந்து கொள்ள வேண்டுமோ, அது தெரிவதில்லை, அதில் பெரும் குறை என்னவென்றால் தெரியவில்லை என்பதும் தெரிவதில்லை.
இந்த ஆறாவது ஸ்லோகத்திலிருந்து ஒன்பதாவது ஸ்லோகம் வரை அர்ச்சுன்னது மனமாற்றத்தை தெளிவுபடுத்துகிறது. இதுவரை தர்ம சாஸ்த்தி ரத்தை பேசி கொண்டிருந்த அர்ச்சுனன் தனது புத்தி மோஹத்தால் கண்டுண்டதை தெரிகிறான். இப்போது எனக்கு நல்லதுஎது, கெட்டது எது என்பது உண்மையில் தெரியவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறான்.
No classes added yet.






Users Today : 6