இரண்டாவது ஸ்லோகத்திலிருந்து பத்தொன்பதாவது ஸ்லோகம் வரை போர் புரியத் தயாராக இருக்கும் இரண்டு அணிகளின் சேனையின் அணிவகுப்பு குறித்த வர்ணனை.
கீதை வெறும் அன்றாட வாழ்க்கை போராட்டத்திற்கான சாதனம் அன்று அதையும் விட, வாழ்க்கைப் போராட்டத்தில் என்றும் நிலையான வெற்றியை அடைவதற்கான செயல்முறைப் பயிற்சி நூலாகும்.
கீதையில் கூறப்பட்டுள்ள யுத்தம் என்பது சத்தியம் மற்றும் அசத்தியம் என்னும் இரு எண்ணப்போராட்டங்களுக்கு இடையில் நடைப்பெறும் மோதல் ஆகும். இந்த இரு எண்ணவோட்டங்கள் நடைபெறும் இடமான நமது சரீரத்தையே க்ஷேத்திரமாக கீதை கூறுகிறது.
இந்த இரு எண்ணவோட்டங்களை உருவகப்படுத்தி வர்ணிக்கின்ற பரம்பரை இருந்தே வந்துள்ளது. வேதத்தில் இந்திரன் மற்றும் விருத்திரன்; வித்யா மற்றும் அவித்யா. புராணங்களில் தேவர்கள் மற்றும் அசுரர்களின் மோதல். இதிகாசங்களில் இராமர் மற்றும் இராவணன்; பாண்டவர் மற்றும் கெளரவர்.
“இதம் சரீரம் கெளந்தேய க்ஷேத்ர மித்யபீதியதே” குந்தியின் மகனே இந்த உடலே ஒரு க்ஷேத்ரமாகும் என நேரடியான வார்த்தைகளால் வர்ணிக்கிறது. குறிப்பாக புனிதமான இடத்தை க்ஷேத்திரம் என்றும் வழங்கப்படுகிறது.
இந்த க்ஷேத்திரம் என்னும் சரீரத்தில் விதைக்கப்படுகின்ற நல்ல மற்றும் தீய எண்ணங்கள் என்னும் விதைகளே சம்ஸ்காரங்கள் என்னும் வடிவத்தில் எப்போதும் முளைக்கின்றன.
सञजय उवाच ।
दृष्टवा तु पण्डवानीकं व्यूढं दुर्यॊधनस्तदा ।
आचर्यमुपसंगम्य राजा वचनमब्रवीत् ॥१-२॥
சஞ்சயன் உவாச –
த்ருஷ்ட்வா து பாண்டவானீகம் வ்யூடம் துர்யோதனஸ் த்தா |
ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசனம்ப்ரவீத் || (1-2) ||
சஞ்ஜயன் கூறுகிறார்.
பாண்டவர்களூடைய அணிவகுப்புடன் இருக்கின்ற படையைப் பார்த்து அரசனான துரியோதனன் துரோணாச்சாரியாரை அணுகி, கீழ்கண்டவற்றை சொன்னான்.
पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीम् चमूम् ।
व्य़ूढां द्रुपदपुत्रॆण तव शिष्यॆण धीमता ॥ १-३ ॥
பச்யைதாம் பாண்டு புத்ராணாசார்ய மஹதீம் சமூம் |
வயீடாம் த்ருபதபுத்ரேண தவ சிஷ்யேண தாமதா || (1-3) ||
ஆச்சாரியரே… நீங்கள் பாருங்கள்! பாண்டவர்களுடைய இந்த பெரிய படையை அணிவகுத்திருக்கும், த்ருபத புத்ரேண புத்திரரான திஷ்டத்யும் னனின் தலைமையில் அவன் உங்களுடைய புத்தியுள்ள சிஷ்யனாக இருந்தவன்.
अत्र शूरा महेष्वासा भीमर्जुनसमा युधि |
युयुधानॊ विराटश्च द्रुपदश्च महारथाः || १-४ ||
அத்ர சூரா மஹேஷ்வாஸா பீமார்ஜூனஸமா யுதா |
யுயுதானே விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத: ||
இந்த சேனையில் வில் யுத்தத்தில் மகா நிபுணர்களும், போர் புரிவதில் பீமனுக்கும், அர்ஜுன்னுக்கும் சம்மானவர்களுமான யுயுதானன், விராடன், மகாரதனான துருபதன், ஆகியோர் இருக்கின்றனர். (மஹாதரன் என்பவன் 10000 பேரிகளிடம் போர் புரியும் வீரம் உடையவர்கள்.)
ध्रूष्टकेतुश्चॆकितानः काशिरजश्च वीर्यवान् ।
पुरुजित्कुन्तिभोजश्च शैब्यश्च नरपुंगवः ॥ १-५ ॥
த்ருஷ்டகேதுஸ்சேகிதான: காசிராஜஸ்ச வீர்யவான் |
புருஜித் குந்திபோஜஸ்ச சைப்ஸ்ச நரபுங்கவ: || (1-5) ||
மேலும் திஷ்டகேது, சேகிதானன் சக்தியுள்ள காசிராஜன், புருஜித் (குந்தி போஜன்), ஶைப்யஹ போன்றவர்கள் இருக்கிறார்கள்.
युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् |
सौभद्रॊ द्रौपदेयाश्च सर्व एव महारथाः ||१-६ ||
யுதாமன்யுச்ச விக்ராந்த உத்தமெளஜாச்ச வீர்யவான் |
ஸெளபத்ரோ த்ரெளபதேச்ச ஸர்வ ஏவ மகாரதா: || (1-6) ||
தைரியசாலியான யுதாமன்யு, பராக்கிரமசாலியான உத்தமெளஜன், சுபத்ரை யின் புதல்வன், திரெளபதியின் குமாரர்கள், இவர்கள் யாவரும் மகாரதர்கள் ஆவர்.
अस्माकं तु विशिष्टा ये तान्निबॊध द्विजॊत्तम ।
नायका मम सैन्यस्य संज्ञार्था तान्ब्रवीमि ते ॥ १-७ ॥
அஸ்மாகம் து விசிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம |
நாயக மம ஸைந்யஸ்ய ஸம்ஞ்ஞார்த்தம் தான் ப்ரவீமி தே || (1-7) ||
நம்முடைய படையில் யார் முக்கியமானவர்களை சொல்கிறேன். பிராமணர்களில் உத்தமானவரே! நீங்கள் கேளுங்கள். என்னுடைய இந்த படையின் உள்ள முக்கியமானவர்கள் சொல்கிறேன். உங்களுக்கு நினைவுபடுத்துவதற்கு சொல்கிறேன்.
भवान्भीष्मश्च कर्णश्च क्रृपश्च समितिञ्जयः ।
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च ॥ १-८ ॥
பகவான் பீஷ்மச்ச கர்ணச்ச க்ருபச்ச ஸமிதிஞ்ய: |
அச்வத்தாமா விகர்ணச்ச ஸெளமதத்திஸ் த்தைவ ச || (1-8) ||
மரியாதைக்குரிய தாங்கள் பீஷ்மர், கர்ணன், கிருபாச்சாரியர் இவர்களை யாரும் யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியாதவர்கள். அஸ்வத்தாமன், விகர்ணன், சௌமதத்தன் மகன் பூரிசிவஸும், ஜயத்ரதனும் இருக்கின்றீர்கள்.
अन्ये च बहवः शूरा मदर्थे त्यत्क्तजीविताः |
ननशस्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः ||१-९ ||
அன்யே ச பஹவ: சூரா மதர்த்தே த்யக்தஜீவிதா; |
நானாசஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிசாரதா: || (1-9) ||
மேலும் இவர்களைப் போல அதிகமான திறமையுடையவர்கள் இருக்கி றார்கள். இவர்கள் என்னுடைய வெற்றிக்கு உயிரையே தியாகம் செய்ப வர்கள். பலவிதமான ஆயுதங்களை ஏந்தியவர்களாக, உடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் போரில் வல்லமையுடையவர்கள்.
अपर्याप्तं तदस्माकं बलं बीष्माभिरक्षितम् ।
पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम् ॥ १-१०॥
அபயாப்தம் ததஸ்மாகம் பலம் பூஷ்மாபிரக்ஷிதம் |
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம் || (1-10) ||
நம்முடைய பீஷ்மரால் தலைமையேற்ற நமது படைகளின் பலம் போதா தென்று தோன்றுகின்றது. அவர்களுடைய படைகளின் பலம் போதுமானதாக இருக்கின்றது. பீமனால் காப்பாற்றப்படுகின்ற படையோ கட்டுபாட்டுக்கு அடங்கியதாக இருக்கிறது.
अयनषु च सवषु यथाभागमवास्थताः ।
भीष्म,एवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि ॥ १-११॥
அயனேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா: |
பீஷ்ம்மேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி || (1-11) ||
நீங்கள் அனைவரும் பீஷ்மரை எல்லா பக்கங்களிலிருந்தும் காப்பாற்றுங்கள். எல்லா வியூக இடத்தில் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்திலிருந்து இதை செய்ய வேண்டும்.
விளக்கம்: படை பலத்தில் பாண்டவ படையை விட கெளரவர்கள் படை பலம் அதிகம். ஆயினும் கெளரவர்களின் மிகப் பெரிய பலவீனம் என்பது அவர்கள் தார்மீக வழியில் நடக்காமல் போனதுதான். தார்மீக பலம் இல்லாத படை எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும் வெற்றி என்பது நிச்சயம் இல்லை, இறுதியில் தோல்வியைத் தான் தழுவியாக வேண்டும். அரசாட்சி நடத்தி அரியணையில் அமர்ந்திருக்கும் கெளரவர்களின் சார்பில் போரிடுவதே தங்கள் கடமை என்று பீஷ்மரும், துரோணரும் கருதினாலும், தாங்கள் அதார்மீக (தார்மீகமல்லாத) பக்கம் இருக்கிறோம் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். அவர்கள் மனமோ நீதிக்காக போராடும் பாண்டவர்களின் பக்ஷ்மே இருந்தது.
போர் புரியத் தயாராக அணிவகுத்து நிற்கும் பிரமாண்டமான சேனைகளைப் பார்த்த துரியோதனன், அங்குள்ள மாவீரர்களை கவனிக்கிறான். பின்னர் அவன் தன் எதிரிகளான பாண்டவர் சேனைத் தலைவர்களைப் உயர்த்தி பேசுகிறான். இதிலிருந்து துரியோதனனின் தாழ்வு மனபான்மை வெளிப் படுகிறது. மாபெரும் சேனையை தன் வசம் வைத்திருந்த போதிலும் துரியோதனனது மனதிலுள்ள தாழ்வு மனப்பான்மையினால் அவனது உட்புற வலிமை பலவீனமாகி விட்டது. தார்மீக நெறியற்ற, அநீதியான காரணங்களுக்கு மட்டுமே தான் போரில் ஈடுபட்டுள்ளோம் என்பதும் அவனுக்குத் தெரியும்.
ஒருவன் தாழ்வு மனப்பான்மையால் அவதிப்படும் போது, தானே ‘எல்லாம்’ என்பதுபோல் அவன் செயல்பட்டாலும், வெளிப்புறம் தான் காட்டும் பொய்யான தைரியமான புறதோற்றத்திற்கு மாறாக, மனதளவில் அவன் பயத்துடனேயே காணப்படுவான். இந்த மன நிலைதான் துரியோதனனுடைய மனநிலை.
போரிட தயார் நிலையிலுள்ள அணிகளை நேர்மறையான அணி, எதிர்மறையான அணி என்று பாகு படுத்தினால் துரியோதனாதிகளின் படையை எதிர்மறை அணி எனலாம். எதிர்மறைச் சக்திகள் எப்பொழுதும் எண்ணிக்கையில் அதிகமாகதான் காணப்படும், தனித்தனியாக அவர்களுள் வலிமையுடையவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒருமித்த கருத்தோ, ஒற்றுமையோ காணப்படாது. ஈடுஇணையற்ற தளபதிகளாகிய துரோணரும், பீஷ்மரும், மற்றொரு மாவீரனாகிய கர்ணனும் துரியோதனனது சேனையில் இடம் பெற்றிருந்தனர். வெற்றிக்காகவே பிறந்தவர்கள் என்று துரியோதனன் அவர்களை குறிப்பிடுகிறான். அவனுக்காக உயிரையும் விடத் தயாராக இருக்கும் பிற மாவீரர்களையும் மற்றும் அதீத திறன் படைத்த, வலிமை யான தளபதிகள் தன்னிடமிள்ளனர் என்ற நம்பிக்கை உடையவனாகிலும் அவர்களுக்குள் ஒருமித்த கருத்தோ, ஒற்றுமையோ இல்லாத காரணத்தால் ஒரு கட்டுக்கோப்பு என்பது இல்லாமல் காணப்படுகிறது என்பதையும் நன்கு அறிந்திருந்தான்.
கட்டுக்கோப்பான, முறையான, சரிவர அமைக்கப்பெற்ற, சம நிலையிலுள்ள அமைப்பாக பாண்டவ சேனை இருப்பதால், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் வெற்றி வாய்ப்பு அவர்களுக்கே அதிகம் என்பதை துரியோதனன் நன்கு அறிந்திருந்தான்.
துரியோதன்னுடைய பல பயங்களுள் பீஷ்மரை இழந்து விடுவோமோ என்ற பயமும் அடங்கும். அப்பயத்தின் காரணமாகவே தன் சக்தி முழுவதைம் திரட்டி எப்பாடுபட்டாவது பீஷ்மரைக் காக்குமாறு படையினருக்கு அவன் கட்டளை இட்டான்.
तस्य सञ्जनयन्हर्ष कुरुवृद्धः पिहमहः ।
सिंहनादं विनद्यॊच्चैः श!ङ्खं दध्मौ प्रतापवान् ॥१-१२॥
தஸ்ய ஸஞ்சனயன் ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:
ஸிம்ஹநாதம்விந்த்யோச்சை: சங்கம் தத்மெள ப்ரதாபவான் || (1-12) ||
துரியோதனுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதற்காக குருவம்சத்தில் வயதான வரான பிதாமகனும், பலம் பொருந்தியவரானவரும் பீஷ்மர் சங்கை ஊதினார். சிங்கத்தைப் போல கர்ஜனை செய்து விட்டு ஊதினார்.
ततः शङ्खश्च भेर्यश्च पणवानकगॊमुखाः ।
सहसैवाभ्यहन्यन्त स शब्दस्तुमुलॊऽभवत् ॥१-१३॥
தத: சங்காஸ்ச பேர்யஸ்ச பணவானககோமுகா: |
ஸஹஸைவாப்யஹன்யந்த ஸ ஞப்தஸ்துமுலோ பவத் || (1-13) ||
அதற்குப் பிறகு மற்றவர்களின் சங்கும், பேரிகைகளும், விதவிதமான சப்தத்தை எழுப்பக்கூடிய இசைக்கருவிகள் எல்லோராலும் உடனடியாக முழங்கப்பட்டது. அந்த சப்தமானது பேரொளியாக இருந்தது.
(இது கெளரவர்கள் பக்கம் உண்டாக்கிய சப்தம்)
ततः श्वेतैहयैर्युक्ते महति स्यन्दने स्थितौ ।
माधवः पाण्डवश्चै दिव्यौ शङ्खौ प्रदध्मतुः ॥१-१४॥
தத: ச்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸந்தனே ஸ்திதெள |
மாதவ: பாண்டவஸ்சைவ திவ்யெள சங்கெள ப்ரதத்மது: || (1-14) ||
இதற்கு பிறகு வெண்மையான குதிரைகளால் பூட்டப்பட்ட மேலான ரதத்தில் அமர்ந்திருக்கின்ற மாதவனும், அர்ச்சுனனும் அவரவர்களுடைய மேலான, திவ்யமான சங்கை ஊதினார்கள்.
पाञ्चजन्यं हृषीकेशॊ देवदत्तं धनञ्जयः ।
पौण्ड्रिं दध्मौ महशङ्ख भीमकर्मा वृकॊदरः ॥१-१५॥
பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேசோ தேவதத்தம் தனஞ்சய: |
பெளண்ட்ரம் தத்மெள மஹாசங்பம் பீமகர்மா வ்ருகோதர: || (1-15) ||
பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஐம்புலன்களை தன் கட்டுக்குள் வைத்திருப் பவரான பகவான் கிருஷ்ணன் ஊதினார். தனஞ்சயனான அர்ச்சுனன் தேவதத்தன் என்ற சங்கை ஊதினான். மிக பெரிய பௌண்ட்ரம் சங்கை பீமன் ஊதினான். பீமன் ஓநாய் போன்ற வயிறு உடையவன், வயிறு சிறியதாக இருந்தாலும் அதிக உணவை உண்பவன்.
अनन्तविजयं राजा कुन्तिपुत्रॊ युधिष्टिरः ।
नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ ॥१-१६॥
அனந்தவிஜயம் ராஜா குந்திபுத்ரே யுதிஷ்டிரா: |
நகுல: சகதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகெள || (1-16) ||
குந்தி மைந்தனான ராஜா யுதிஷ்டிரன் அனந்தவிஜயம் என்கின்ற சங்கை ஊதினார். நகுலன், சகதேவன், சுகோசம், மணிபுஷ்ப என்கின்ற சங்கை ஊதினார்கள்.
कश्यश्च परमेष्वासः शिखण्डि च महरथः ।
धृष्टद्युम्नॊ विराटश्च सात्यकिश्चापराजितः ॥१-१७॥
காசியஸ்ச பரமேஷ்வாஸ: சிகண்டி ச மஹாரத: |
த்ரிஷ்டத்யும்ன்னே வராடஸ்ச ஸாத்யகிஸ்சாபாராஜித: || (1-17) ||
விற்படையில் தலைசிறந்த காசிராஜனும், மஹாரதிகனுமான சிகண்டியும், திருஷ்டத்யும்னனும், விராடதேசத்தரசனும், பிறரால் வெல்லப்படாத சாத்யகியும்
द्रुपदॊ द्रौपदेयश्च सर्वशः पृथिवीपते ।
सौभद्रश्च महबहुः शङ्खान्दध्मु: पृथक्यृथक् ॥ १-१८ ॥
த்ருபதோ த்ரெளபதேயாஸ்ச ஸர்வச: ப்ரதிவீபதே |
ஸெளபத்ரஸ்ச மஹாபாஹு: சங்கான் தத்மு: ப்ருதக் ப்ருதக் || (1-18) ||
காசிராஜன் வில்லேந்தி சண்டை செய்வதில் வல்லவர். சிகண்டி என்ற மஹாரதன், திஷ்டத்யும்னன், மற்றவர்களால் வெற்றி கொள்ள முடியாத சாத்யகி. துருபதன், திரௌபதி புத்திரர்கள், மிக நீண்ட கைகளை உடைய சுபத்திரையின் மகன் அபிமன்யு ஆகியோர்கள் தத்தம் சங்கை ஊதினார்கள்.
स घॊषॊ धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् |
नभश्च पृथिवी चैव तुमुलॊऽभ्यनुनादयन् ||१-१९||
ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயானி வ்யதாரயத் |
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யனுநாதயன் || (1-19) |
இவர்கள் ஊதிய சங்கின் பேரொலி பூமியிலும், ஆகாயத்திலும் எதிரொலியை எழுப்பின. திருதாஷ்திரனுடன் சம்பந்தப்பட்ட கௌரவப் படையில் உள்ள வர்களிடம் பயத்தை உண்டு பண்ணியது.
இரண்டாவது ஸ்லோகத்திலிருந்து பத்தோன்பதாவது ஸ்லோகம் வரை சேனைகளின் வர்ணனை, அதில் பன்னிரெண்டாவது ஸ்லோகத்திலிருந்து பத்தொன்பதாவது ஸ்லோகம் வரை யார், யார் போர் தொடங்குவதற்கான சங்கை முழங்கி யுத்த ஆரம்ப முழக்கம் முழங்கினார்கள் என்பது வர்ணிக்கப்படுகிறது.
துர்யோதனனுடைய மனதிலே அச்சம் குடி புகுந்து நிலைமை கெட்டு வருவதை உணர்ந்த பீஷ்மர், துரியோதன் உட்பட அனைத்து சேனைகளுக் கும் உற்சாகத்தை ஊட்ட உரக்க சிம்ம நாதம் செய்து தன்னுடைய சங்கை எடுத்து முழங்கினார்.
தொடர்ந்து கெளரவர்கள் பக்கம் இருந்து சங்குகள், போர் பறைகள் முதலான வாத்திய கோசங்கள் விண்ணைப் பிளந்தன.
அடுத்து வெள்ளை குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வந்த பகவான் கிருஷ்ணரும், அர்ச்சுன்னும் தத்தம் தெய்வீக சங்குகளை எடுத்து முழங்கினர். பகவான் கிருஷ்ணர் தனது “பாஞ்சஜன்யம்” என்ற சங்கை எடுத்து முழங்கினார். தனஞ்ஜயனான அர்ஜுனன் தன் “தேவதத்தம்” என்னும் சங்கை முழங்கினான்; அரிய பல செயல்களைச் செய்வதில் வல்லவனாகிய பீமசேனன் “பெளண்ட்ரம்” என்னும் தன் சங்கை முழங்கினான்.
இந்த இடம் சிந்தனைக்குரியது. பீஷ்ஷீ்மர் முதலில் சங்கை ஊதியதிலிருந்து முதல் போர் முழக்கம் கெளரவர்களுடம் இருந்தே வருகிறது. யுத்தத்தின் முழு பொறுப்பை கெளரவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அடுத்து கிருஷ்ணரின் சங்கநாதம் யுத்தத்திற்கான சவாலை ஏற்கும் சம்மதம் தான். யுத்தத்தின் இந்த ஆரம்பம் மிகவும் கவனத்துக்குரியது. பீஷ்மர், கெளரவர் தரப்பில் அறைகூவினால், பாண்டவர்களின் படைத் தலைவரல்லவா பதில் முழக்கம் செய்திருக்க வேண்டும் அல்லது யுத்த சன்னதராக போருக்காக நிற்கும் வீரத்தலைவர்களில் யாரேனும் மறுமொழி கொடுப்பது தான் உசிதம். ஆனால் மறுமொழி பகவான் கிருஷ்ணரிடம் இருந்து வருகிறது. கிருஷ்ணர் சாரதியாக மட்டுமே பிரசன்னமாகியுள்ளார். யுத்த சன்னதராகவும் இல்லை, யுத்தம் செய்வதற்காகவும் இல்லை. மறுமொழி கிருஷ்ணர் அளிக்கிறார். பின் அர்ச்சுனன் முதலானோர் அவரவர் சங்கை முழங்கி மறுமொழி அளிக்கின்றனர் என்றால் இந்த யுத்தம் பரமாத்மாவின் சித்தமாகவும், பரமாத்மாவின் கருவியாக மட்டும் இருந்து யுத்தம் செய்ய தயாராக இருந்தனர். பீமன் சங்கை முழங்கியிருந்தால் அது எதிர் சவாலாகத் தான் இருந்திருக்கும், கிருஷ்ணரிடமிருந்து மறுமொழி வந்ததினால் கெளரவர் களுடைய சவாலை ஏற்றுக் கொள்ளும் சம்மதமாயிற்று.
துரியோதனன் பீமனை தான் யுத்த மையமாகக் கருதினான். பீமன் தான் முக்கிய கர்த்தாவாக இருப்பான் என்றும் நம்பினான். பீமன் பிரதானமாக இருந்திருந்தால் துரியோனன் நம்பியபடி அவனே ஒருகால் வெற்றி பெற்றி ருக்கலாம். ஆனால் துரியோதனனின் ஆரூடம் பலிக்கவில்லை. தற்செய லாகப் பல விஷயங்கள் இடையில் நுழைந்து விட்டன. யுத்தத்தின் இடையில் பரமாத்மா குறுக்கிடப் போகிறார் என்று துரியோதனன் கற்பனை யில் கூட நினைக்கவில்லை. கிருஷ்ண பகவான் ரூபத்தில் அறிவுக்கு எட்டாத சக்தி குறுக்கிடும் போது அனுமானமோ, ஆரூடமோ செய்வது அசாத்தியம்.
No classes added yet.






Users Today : 6