नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः |
न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः ।। २३
நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைநம் தஹதி பாவக: |
ந சைனம் க்லேதயந்த்யாபோ ந சோஷயதி மாருத: || 23 ||
ஏநம் – இந்த ஆத்மாவை; சஸ்த்ராணி – ஆயுதங்கள்;
ந சிந்தந்தி – வெட்டுவதில்லை; ஏநம் – இதனை; பாவக: – நெருப்பு;
ந தஹதி – எரிப்பதில்லை; ஏநம் – இதனை; ஆப: – தண்ணீர்;
ந க்லேதயந்தி – நனைப்பதில்லை; ச – மேலும்; மாருத – காற்று;
ந சோஷயத – உலரவைப்பதில்லை.
இந்த ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை. நெருப்பு எரிப்பதில்லை, தண்ணீர் நனைப்பதில்லை, மேலும் காற்று உலர வைப்பதில்லை.
விளக்கம்:
இந்த ஸ்லோகத்தில் ஆத்மாவை அழிக்கமுடியாது என்பதை மீண்டும் வேறொரு கோணத்தில் கூறுகிறார். ஒரு பொருளுக்கு நான்கு விதத்தில் அழிவு வரும். அதாவது நான்கு பூதங்களினால் ஒரு பொருளுக்கு அழிவு வரும். அந்த நான்கு பூதங்கள் பிருத்வி(பூமி), வாயுவு, நெருப்பு, நீர். இந்த நான்கு பூதங்களினால் ஏற்படும் அழிவை நாம் பார்க்கின்றோம். கத்தி அல்லது வாள் போன்ற ஆயுதங்கள் இருக்கிறது. இந்த ஆயுதங்கள் எதிலிருந்து செய்யப்பட்டது என்றால் பிருத்விலிருந்து செய்யப்பட்டது. ஒரு ஜடமான பொருளான அந்த ஆயுதங்களால் ஒன்றை அழிக்கலாம் ஆகையால் பிருத்வினால் அழிவை உண்டாக்கலாம். நீரினால் அழிவை உண்டாக்கலாம், நெருப்பினால் ஒன்றை இல்லாமல் செய்ய முடியும், காற்றினால் அழிவை உண்டாக்கலாம். ஆகாசம் எதையும் அழிப்பதில்லை இவற்றிற்கெல்லாம் சாட்சியாக இருப்பதால் பகவான் ஆகாசத்தை விட்டு விட்டார். ஐந்து புதங்களில் இந்த நான்கு பூதங்களால் ஒன்றையொன்று அழிவை உண்டாக்கலாம். ஆனால் இந்த நான்கு பூதங்களினாலும் ஆத்மா விற்கு எந்த அழிவும் ஏற்படாது, அழிக்கவும் முடியாது என்பது தான் இந்த ஸ்லோகத்தினுடைய சாரம்.
No classes added yet.






Users Today : 6