ஶ்ரீமத் பகவத்கீதையின் இரண்டாவது அத்தியாயம் முழு பகவத்கீதையின் சாரமாக அமைந்துள்ளது.
முதல் அத்தியாயம் போர்கள வர்ணனை மகாபாரத கதையோடு சம்பந்தப் பட்டதும் மற்றும் அர்ச்சுன்னுடைய மனநிலையும் கருத்தாக இருந்தது. முதல் அத்தியாயம் அர்ச்சுனனின் மனநிலையை விளக்குகிறது. அர்ச்சுன்னுக்கு துக்க காரணம் மோஹம் (மதிமயக்கம்) என்பது இந்த ஸ்லோகங்கள் விளக்குகிறது. பாண்டவ, கெளரவர்கள் இரு படைகளிலு முள்ள புகழ் பெற்ற போர் வீரர்கள் தங்கள், தங்களுடைய ரதங்களில் இருக்கி றார்கள். அவர்கள் சங்க நாதங்களும் செய்து விட்டார்கள். பாணங்கள் பறக்க வேண்டிய கடைசி நேரத்தில் ஷத்திரிய தர்மத்திற்கேற்ற உறுதியோடு யுத்த களத்திற்கு வந்த அர்ச்சுனன் யுத்தம் செய்வதற்காக கூடியிருக்கும் பூஜ்யர்களான ஆசாரியர்கள், பாட்டன்மார்கள், சகோதரர்கள், புதல்வர்கள், பேரன்மார்கள் ஆகியோர்களை கண்ட மாத்திரத்தில் அவனுடைய மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இரண்டு படைகளிலும் போர் புரிய தயாராகி நிற்கும் போர் வீரர்கள் “தன்னுடையவர்கள்” என்ற தவறான எண்ணமான “நான் அவர்களுக்கு சொந்தம், அவர்கள் என்னுடையவர்கள்” என்ற பற்றும், பற்றின் காரணமாக மதிமயக்கம்(மோஹம்) அவனை ஆட்க்கொண்டது. தனது மதிமயக்கம், அதன் விளைவான மனகலக்கம்(துக்கம்) காரணமாக அவன் தன்னுடைய விவேகத்தையும், சமயோஜித புத்தியையும் இழந்து போரிலிருந்து விலக எண்ணி, தன் வில்லையும், அம்பையும் அப்பால் எறிந்து விட்டு தேர்தட்டின் மேல் உட்கார்ந்து விடுகிறான். இதுவரை முதல் அத்தியாயத்தில் விளக்கம் பார்த்து முடித்தோம்.
இரண்டாவது அத்தியாயம் கீதையின் முழு சாரமாக அமைந்துள்ளது. இந்த அத்தியாயம் நமக்கு புரிந்தாலே கீதையின் உபதேசம் என்ன என்பது புரிந்து விடும். அதேபோல் கடைசி அத்தியாயமும் முழு கீதையின் சாரமே. இடையில் வரும் அத்தியாயங்கள் எல்லாம் இந்த சாரமான கருத்துக்களை எல்லாம் விளக்குவதாக இருக்கிறது. மேலான விஷயத்தை போதிக்கும் எந்த நூலை நாம் எடுத்து கொண்டாலும் இந்த முறையிலேயே கையாளப் பட்டிருப்பதை நாம் காணலாம். இந்த இரண்டாவது அத்தியாயம் கீதையின் “உபகிரமபாகம்” என்று கூறலாம். உபகிரமபாகம் என்றால் ஆரம்பத்தில் முகவுரையாக உபதேசத்தின் சாரத்தை கூறுவது பிறகு எல்லா கருத்துக் களையும் விளக்கிய பின் கடைசியாக முடிவுரையாக சாரத்தையும் எடுத்து கூற வேண்டும் இதற்கு “உபஸம்ஹாரபாகம்” என்று பெயர். கீதையில் “உபஸம்காரபாகம்” என்பது பதினெட்டாவது அத்தியாயம். இந்த உபகிரம மமும், உபஸம்ஹாரமும் ஒன்றாக இருக்க வேண்டும். இடையில் வரும் அத்தியாயங்கள் என்பது சாரத்தின் விளக்கம், உபஸம்ஹாரம் என்பது கடைசியாக சாரத்தை ஞாபகப்படுத்தி முடிப்பது. இது தான் ஒரு நூலின் அமைப்பு.
இந்த இரண்டாவது அத்தியாயத்தில் நான்கு முக்கிய தலைப்புக்களில் கருத்துக்கள் வர இருக்கிறது. முதல் பத்து ஸ்லோகங்கள் வேதாந்தத்திற்கு அறிமுகமான சில கருத்துக்கள் வர இருக்கிறது. அதை நுழைவாயில் என்று சொல்லலாம். இதில் சில முகவுரை சம்பந்தமான கருத்துக்களை பார்க்க இருக்கின்றோம். யார் அதிகாரி, சம்சாரம் என்றால் என்ன, என்றெல்லாம் பார்க்க இருக்கின்றோம். அடுத்து இரண்டாவதாக வருகின்ற தலைப்பு ஞான யோகம், மூன்றாவதாக கர்மயோகம், நான்காவதாக ஞானியினுடைய லக்ஷணம். இந்த தலைப்பின் கீழ் வருகின்ற ஸ்லோகங்களில் ஞானத்தின் பலன்களும் வருகின்றன. இவ்விதம் இரண்டாவது அத்தியாயம் அமைந்து உள்ளது. இந்த நான்கு தலைப்பு என்பது முக்கிய கருத்து என்ற அடிப்டையில் குறிப்பிடபட்டுள்ளது . இதை தவிர மேலும் சில கருத்துகள் பேசப்பட்டுள்ளன. விளக்க உரையில் அதையும் பார்க்க உள்ளோம்.
இரண்டாம் அத்தியாயம் ஒவ்வொரு ஸலோகங்களாக விளக்கம் பார்ப்போம்.
முதல் ஸ்லோகம்
सञ्जय उवाच ।
तं तथा कृपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणम् ।
विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदन: ॥ २-१ ॥
சஞ்சய் உவாச
தம் ததா க்ருபயாவிஷ்ட-மச்ருபூர்ணாகுலேஷணம் |
விஷீதந்த-மிதம் வாக்ய-முவாச மதுஸூதன: ||
ததா – அங்ஙனம்; க்ருபயாஆவிஷ்டம் – இரக்கம் ததும்பியவனும்; அச்ருபூர்ண ஆகுல ஈஷணம் – நீர் நிறைந்து பார்வை குறைந்த கண்களுடையவனும்; விஷீதந்தம் – துக்கப்பட்டுகொண்டிருப்பவனும்; தம் – அவனுக்கு(அர்ச்சுனன்) மதுசூதனன் – மதுசூதனன்;
இதம் வாக்கியம் – இந்த வாக்கியத்தை; உவாச – சென்னார்.
அவ்வாறு க்ரபையால் மனம் நிறைந்தவனும், கண்ணீரால் பார்வை மறைந்த வனும் சோகத்தால் மூழ்கியிள்ளவனுமான அர்ச்சுனனை நோக்கி கிருஷ்ணர் இந்த வார்த்தைகளை கூறினார்.
இந்த ஸ்லோகத்தில் ‘’ஶ்ரீகிருஷ்ணரை’’ ‘’சஞ்சயன்’’ ‘’மதுசூதனன்’’ என்று உரைத்து உள்ளார். அதன் பொருள் பார்ப்போம்.
‘’மது’’’ எனும் அரக்கனை அழித்ததால் அவருக்கு ‘’மதுசூதனன்’’ என்று பெயர். ‘சூதன’ என்ற வடமொழிச்சொல் ‘’அழிப்பது’’ என்ற வினைச் சொல்லிலிருந்து உண்டான பெயர்ச் சொல்.
மற்றொரு பொருள்
நமது பொறிகளே ஆண்டவனின் சேவையில் ஈடுபடா விட்டால் அரக்கர் களுக்கு ஈடாகப் பேசப்படுகின்றன. எந்தப் பொறி விஷய சுகத்தைப் பின்பற்றிச் செல்கிறதோ அதுவே மதுவென்னும் அரக்கன்.
இறை அடியார்களின் பொறிகளை தன் வசப்படுத்தி அவற்றின் ஈர்ப்புசக்தி வெளிப் பொருட்களில் போகாமல் மாய்க்கும் ஆண்டவனுக்கு மதுசூதனன் என்ற பெயர் தகும்.
இந்து சமயத்தில் மதுசூதனன் என்ற பெயர் விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு நாமங்களில் ஆறாவது பெயர். விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைப் பட்டிய லிட்டுத் தோத்திர உருவில் பீஷ்மரால் யுதிஷ்டிரனுக்கு உரைக்கப்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 73-வதாக வரும் பெயர்.
அடுத்து “க்ருபா” என்ற சொல்லின் விளக்கம்:
தன் மனதை முற்றிலும் தன் வசத்தில் வைத்திருக்கும் ஒருவன் பிறர்படும் துன்பத்தைப் போக்க முயல்வது க்ருபையாகும்.
இங்கு அர்ச்சுனனிடத்து தென்படுவது உண்மையில் கிருபையன்று. வெளி சூழலின் தாக்கத்தால் உணர்ச்சியின் உத்வேகத்தால் பிறந்த மனமாற்றம். “க்ருபயா ஆவிஷ்டம்” என்று சஞ்சயன் கூறியது “சூழ் நிலையால் ஏற்பட்ட ”தயை” என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
அகராதியில் க்ருபா, தயை, இரக்கம், கருணை என்பதற்கு ஒரே பொருள் தான் கொடுக்கப்பட்டுள்ளதை காணலாம், இச்சொற்களை ஒரே பொருளில் தான் உபயோகப் படுத்துகிறோம். ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள “க்ருபா” என்பது வெளி சூழ்நிலையின் தாக்கத்தால் பிறந்த “தயை” என்று தான் பொருள் கொள்ள தகும்.
இயல்பிலேயே கருணை, இரக்கம், என்பது மன நிலையில் பிறப்பது. மனிதனுடைய உள்ளத்தின் உணர்வு கருணை, இரக்கம். கருணை உள்ளவன் தனிமையில் இருந்தாலும் அவன் உள்ளத்தில் கருணை நிரம்பி இருக்கும், வெளி சூழ்நிலையோடு அதற்கு சம்பந்தமில்லை.
சூழ்நிலையில் பிறக்கும் “தயை” என்பது வெளி சூழ்நிலையின் தாக்கத்தால் (நெருக்கடியால்) பிறக்கிறது. வழியில் காணும் ஒரு பிச்சைகாரனையோ, ஒருவரின் இயலாமையையோ காணும் போது நம் மனதில் பிறப்பது தயை, கருணையல்ல.
தயையின் மேல் நிற்கும் சமூகம், பிச்சைகாரனை போஷிக்கிறது, கருணையின் அடிப்படையில் ஒரு சமூகம் நிற்குமானால் பிச்சை எடுக்காதிருக்க வழி வகை செய்யும்.
வெளி சூழ்நிலையின் தாக்கத்தால் பிறக்கும் “தயை” அஹங்காரத்தின் செயலே, நற்செயல்களால் தன்னை நிரப்பிக்கொள்கிறது.
ஆகவே இந்த ஸ்லோகத்தில் “க்ருபாஆவிஷ்டம்” என்ற சொல், வெளி சூழ்நிலையின் தாக்கத்தால் பிறந்த “தயை” என்ற பொருள் தான் கொள்ள வேண்டும்.
No classes added yet.






Users Today : 6