அர்ச்சுனனுடைய வாதம் என்ன என்று பார்க்கலாம்.
न काङ्क्षे विजयं कृष्णनच राज्यं सुकानि च ।
किं नो रज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा ॥ १-३२ ॥
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகானி ச |
கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர் ஜீவிதேன வா || (1-32) ||
ஹே க்ருஷ்ணா! இந்தப்போரில் வெற்றியை விரும்பவில்லை. அதனால் அடையும் அரசையும் விரும்பவில்லை. இவைகளினால் அடையப்படும் சுகத்தையும் நான் விரும்பவில்லை. இந்த அரசை அடைவதனால் என்ன பலன் போகத்தினால் என்ன பயன் உயிர் வாழ்வதினாலும் என்ன பலன்
येषामर्थे कङिक्षतं नो रज्यं भोगाः सुकानि च ।
त इमेऽवस्थिता युद्धे प्रणांस्त्यत्तवा धनानि च ॥ १-३३ ॥
யேஷாமர்த்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா: ஸுகானிச |
திமேSவஸ்திதா யுத்தே ப்ராணான்ஸ்த்யக்த்வா தனானி ச || (1-33) ||
எவர்களுடைய நன்மைக்காக நம்மால் விரும்பப்பட்டதோ, இந்த அரசு, போகப்பொருட்கள், இன்பங்கள், அவர்கள் இந்த போர்களத்தில் போர் புரிய தயாராக இருக்கின்றார்கள். தன்னுடைய உயிரை விடத்தயாராக இருக்கின்றார்கள். அவர்களுடைய செல்வங்களையும் விட்டு தியாகம் செய்து இருக்கின்றார்கள்.
आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः ।
मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा ॥ ३४॥
ஆச்சார்யா: பிதர: புத்ராஸ்த்தைவ ச பிதாமஹா: |
மாதுலா: ச்வசுரா: பேளத்ரா: ஸ்யாலா: ஸம்பந்தினஸ்த்தா || (1-34) ||
ஆச்சார்யர்கள், தந்தைமார்கள், மகன்கள், அவ்விதமே பாட்டானர்கள், மாமன் மார்கள், மாமனார்கள், பேரர்கள், மைத்துனர்கள் இவை போன்ற மற்ற உறவி னர்கள் இங்கே கூடியிருக்கிறார்கள்.
एतान्न हन्तुमिच्छामि घ्रतोऽपि मधुसूदन ।
ऐ त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महीकृते ॥ १-३५ ॥
ஏதான்ன ஹிந்துமிச்சாமி க்னதோSபி மதுஸூதன |
அபி த்ரைலோக்யராஜயஸ்ய ஹேதோ:கிம் நு மஹிக்ருதே || (1-35) ||
இவர்களை கொல்வதற்கு நான் ஆசைப்படவில்லை, நான் கொல்லப்பட்ட போதிலும், ஹே மதுசூதனா! மூன்று உலகத்தில் உள்ள நாடு கிடைத்தாலும் கொல்ல மாட்டேன். இந்த பூமிக்காக எப்படி கொல்வேன்.
निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन। पापमेवश्रयेदस्मान्हत्वैतानातताहिन: ॥ १-३६ ॥
நிஹத்ய தார்தராஷ்ட்ரான்ந: கா ப்ரீதி: ஸ்யாஜ்ஜநார்தன | பாபமேவாச்ரயேதஸ்மான் ஹத்வதானாத்தாயின: || (1-36) ||
திருதராஷ்டிரனை சார்ந்தவர்களை கொன்று விடுவதால் என்ன சுகம் கிடைக்கப் போகிறது, ஜனார்தனா!. இவர்களைக் கொல்வதால் நமக்கு பாவம்தான் வந்து சேரும். அவர்கள் அதர்மவாதிகளாக இருந்தாலும், (ஆததாயி – மகாபாவிகள்), அவர்களை கொல்ல விரும்பவில்லை
ஆததாயி – ஆறு வகையான பாவங்களில் ஒன்றாவது செய்திருப்பவன். இதன் விசாரம் செய்யப்படாமல் கொன்று விடலாம் என்பது தர்மசாஸ்திரம். அவைகள்
तस्माननार्हा वयं हन्तुं घार्तरष्ट्रान्स्वबान्धावान् ।
स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव ॥ १-३७ ॥
தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ரான்ஸ்வபாந்தவான் | ஸ்வஜனம் ஹி கதம் ஹத்வா ஸுகின: ஸ்யாம மாதவ: || (1-37) ||
ஆகவே நாம் இதை செய்வதற்கு நமக்கு அருகதை கிடையாது. திருத ராஷ்டிரனை சார்ந்தவர்கள் நம்முடைய உறவினர்கள். எனவே, நம்மை சார்ந்தவர்களை கொன்று எப்படி நாம் சுகத்தை அடைபவராக முடியும்.
இந்த ஸ்லோகங்களில் அர்ச்சுனன் மோஹத்தில் வசப்பட்டு பேசி வருகிறான் என்று பார்த்தோம். தொடர்ந்து இந்த முப்பத்தி இரண்டாவது ஸ்லோகத்திலி ருந்து,கிருஷ்ணா! திருதராஷ்டிரப் புதல்வர்களைக் கொன்று நமக்கு என்ன இன்பம் வரப் போகிறது?மேலும் ஜனார்த்தனா! இந்த ஆத்தாயிகளைக் கொல்வதால் பாபமே நம்மை வந்தடையும் என்று கூறினான்.
ஜனார்த்தன் – இது கிருஷ்ணருடைய மற்றொரு பெயர்.
ஆததாயி – ஆறு வகையான பாவங்களில் ஒன்றாவது செய்திருப்பவன். இதன் விசாரம் செய்யப்படாமல் கொன்று விடலாம் என்பது தர்மசாஸ்திரம். அவைகள் 1. வீட்டைக் கொளுத்துபவன், 2. உணவில் விஷம் வைத்தவன், 3. நிராயுதபாணியை ஆயுதத்துடன் சென்று கொல்பவன், 4. பொருட்களை அபகரித்தல், 5. நிலத்தை அபகரித்தல், 6. பிறர் மனைவியை அபகரிப்பவன். திருதராஷ்டிரனுடைய மக்கள் இத்தனைவிதமான குற்றங்களையும் செய்த வர்கள் ஆவார்.
தர்ம சாஸ்த்திரம் கொலை செய்வதை நியாயப் படுத்துகிறதா என்றால் நமது
சாஸ்திரத்தில் ஒரு நியதி கூறப்படுகிறது அதை பார்ப்போம்,
சாமான்ய தர்மம் என்பது அஹிம்சை, விஷேச தர்மம் என்பது சத்திரிய னுடைய தர்மம், அதாவது தர்மயுத்தம் செய்தல். ஒரு சூழ்நிலையில் ஒருவன் இறந்தால் தான் ஒரு குடும்பம் காப்பாற்றப்படும் என்றால் தர்ம சாஸ்த்திரம் சொல்கிறது “குலஸ்யார்த்தே ஏகம் த்யஜேத்”, குலத்திற்காக ஒருவனை தியாகம் செய்வதில் தவறு கிடையாது. இது எப்படி என்றால் நம்முடைய கால் பெருவிரலில் ஒரு காயம் ஏற்பட்டு அது புண்ணாகி அதனால் நம் உடல் முழுவதும் பாதிப்பு ஏற்படகூடும் என்றால் நாம் அந்த விரலை நீக்கவிட தாயாரவதுபோல். பிறகு ஒரு கிராமம் காப்பற்றப்படும் என்றால் ஒரு குலத்தை இழக்க வேண்டி வந்தால், தர்ம சாஸ்த்திரம் சொல்கிறது “க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத்” கிராமத்திற்காக ஒரு குலத்தை தியாகம் செய்யலாம். அடுத்து “நகரஸ்யார்த்தே க்ராம த்யஜேத்” ஒரு நகரத்திற்காக ஒரு கிராமத்தை இழக்கலாம் என்றும் “தேசத்யார்த்தே நகர த்யஜேத்” ஒரு தேசத்திற்காக ஒரு நகரத்தையே இழக்கலாம் என்றும் கடைசியாக அந்த ஸ்லோகம் “ஆத்மார்த்தே ப்ருத்வீம் த்யஜேத்” என்று முடிவடைகிறது, “ஆத்மார்த்தே ப்ரத்வீம் த்யஜேத்” என்பதன் பொருள் (ஆத்மார்த்தே என்றால் தனக்காக, தனக்காக என்பது தன்னுடைய மோக்ஷத் திற்காக) தன்னுடைய மோக்ஷத்திற்காக உலகையே தியாகம் செய்யலாம் என்று சாஸ்த்திரம் கூறுகிறது.
குலஸயார்த்தே ஏகம் த்யஜேத்
க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத்
நகரஸ்யார்த்தே க்ராம த்யஜேத்
தேசத்யார்த்தே நகர த்யஜேத்
ஆத்மார்த்தே ப்ரத்வீம் த்யஜேத் ||
இந்த ஸ்லோகத்தில் முதல் நான்கு வரிகள் தர்ம சஸ்த்திரம், கடைசி வரி வேதாந்தம்.
முப்பத்தி ஏழாவது ஸ்லோகத்தில் அர்ச்சுனன், திருதராஷ்டிரனை சார்ந்தவர்களை நம்மவர்கள்(ஸ்வஜனம்) என்று கூறுவதோடு மட்டுமல்லாது நம்மை சார்ந்தவர்களை கொன்று எப்பபடி நாம் சுகத்தை அடைபவராக முடியும்.
இங்கு அர்ச்சுனன் வந்திருப்பது அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட தர்மயுத்தம் செய்ய, ஆனால் அர்ச்சுனன் மோஹ வயப்பட்டு எதிரணியில் போரிட வந்திருப்பவர்கள் நம் உறவினர்களும், ஆசிரியர்களும் என்ற பற்றுதலினால் ஏற்ப்பட்ட உணர்வுபூர்வமான எதிர்வினையினால் போரிட மறுக்கிறான். தன் மனிதர்களை அழிப்பதற்கான தைரியத்தை ஏற்படுத்திக் கொள்ள அவனால் முடியவில்லை. அர்ச்சுனனுக்கு தர்மம், அதர்மம் பற்றி தெரியாதவன் அல்ல. அவன் இப்பொழுது மோஹத்தில் ஆட்பட்டு பேசி வருகிறான். ஒருவனுடைய மனது மோஹத்தின் வசபட்டள்ளது என்றால் அது (மோஹத்தில் வசப்பட்டுள்ளேன் என்பது) அவனுக்கு தெரியாது. அப்படி தெரியாமல் ஒருவனை வசப்படுத்துவது தான் மோஹம். இங்கு அர்ச்சுனன் சத்திரிய தர்மத்தை தியாகம் செய்யும் நிலைக்கு இந்த மோஹம் அவனை ஆட்கொண்டுள்ளது. நம் இதிகாச புருஷர்கள் தர்மத்தில் எப்படி நிலை கொண்டிருந்தார்கள் என்பதை விபீஷணர் எடுத்த முடிவு நமக்கு ஒர் எடுத்துகாட்டு. விபீஷணரை மிக உயர்ந்தவர் என்று இதிகாசம் கூறுகிறது காரணம், விபீஷணர் ஒரு சூழ்நிலையில் “எனக்கு உணவும், உறைவிடமும் கொடுத்தனால் நான் அதர்மத்திற்கு துணை போகமாட்டேன்”. “எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு தான் நான் செல்வேன்” (“யத்ர தர்ம; தத்ர அஹம்”) என உரக்க கூறினார், இதுதான் விபீஷணரின் மன நிலை. அவருடைய மனம் சத்துவ குணத்தில் நிலைபெற்று உயர்ந்திருந்தது, அதனால் தான் “யத்ர தர்ம: தத்ர அஹம்” என்று கூறினார். இதுவே “சத்திரிய தர்மம்”.
No classes added yet.






Users Today : 6